Showing posts with label நரசிம்ம ஸ்தோத்திரம். Show all posts
Showing posts with label நரசிம்ம ஸ்தோத்திரம். Show all posts

Monday, October 14, 2013



                                         
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்


                

                        *** நரசிம்மர் அருள்புரிவாராக ***

சகல காரியங்களும் தடையின்றி நிறைவேற தினசரி பாராயணம் செய்யவும்.




1. ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

2. ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்

3. பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

4. ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

5. ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்

6. நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

7. யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்

8. ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

9. ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

10. நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாமயஹம்

11. தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா நமாம்யஹம்

12. சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

13. உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

               

                   *** நரசிம்மர் அருள்புரிவாராக ***
   





 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff