Thursday, October 24, 2013


எந்த மென்பொருள்கள் பயன்படும் என்பதை பார்பதற்க்கு முன்னர் தமிழ் மொழியை எந்த எந்த முறைகளில் உள்ளிடலாம் என்பதை முதலில் பார்போம். பரவலாக இரண்டு வழிகளில் நாம் தமிழை தட்டச்சு செயலாம். முதலாவது தமிழ் மொழிகென்றே வடிவமைக்கப் பட்ட கீபோர்ட் மூலமாக . இதற்க்கு உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
(எ.கா: tamil 99 key board, tamil old typewriting keyboard, tamil new typewriting key board.) முதலாவது முறையில் தட்டச்சு செய்ய மேற்சொல்லியிருக்கும் விசைபலகைகளில் ஏதேனும் ஒன்றை கற்றிருக்க வேண்டும். இது கொஞ்சம் சிரமமான வழி ஆனால் சரியான வழி.
இரண்டாவது முறை நம்மை போன்ற சோம்பேறிகளுக்கானது, அது தான் phonetic keyboard முறை. இந்த முறையில் நாம் (amma) என்று தட்டசிட்டாலே (அம்மா ) என்று வந்துவிடும், இதுதான் பலராலும் உபயோகப்படுத்தும் முறையேன்றாலும், கொஞ்சம் தவறான முறைதான். தமிங்க்லீஷில் தட்டச்சு செய்வதற்க்கு இது பரவாயில்லை.  
  
தமிழ் மொழி என்றில்லை, இந்திய மொழி அனைத்திலும் தட்டச்சு செய்வதற்கு அனைவராலும் பரவலாக உபயோகப் படுத்தபடும் மென்பொருள்கள் 3 . அவை,

1. Google Input Tools:
இந்த மென்பொருள் கூகிள் குழுமம் தரும் இலவச மென்பொருள்.  இதன் மூலம் இந்திய மொழிகள் மட்டுமின்றி 22 மொழிகளில் தட்டச்சு செய்ய உதவுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள். இது போனேடிக் (phonetic) வகையை சார்ந்தது.

இது மைக்ரோசாப்ட் தரும் இலவச மென்பொருளாகும், இது இந்திய மொழிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதுவும் போனேடிக் (phonetic) வகையை சார்ந்தது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள்.


இது New Horizon Media என்ற நிறுவனத்தால் தரப்படும் இலவச மென்பொருளாகும். இதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற முக்கிய இந்திய  மொழிகளை தட்டச்சிடும் வசதி தரப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக, போனேடிக் மட்டுமல்லாது, இதர விசைபலகைகளும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இது பலராலும் விரும்பி பயன்படுத்தப் படுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள்.


நம்மால் பெரியதாய் தமிழ் மொழியை வளர்க்க முடியாவிட்டாலும், கூடிய மட்டும் தமிழை உயிர்ப்போடாவது வைத்திருக்க பங்களிப்போம்.ஏதேனும் விளக்கம் வேண்டின் கருத்துறையிடுக.....  படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் 99 விசைப்பலகை. 



Monday, October 14, 2013


பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க வாங்கும் பணம் பட்டும் கடன் அல்ல. அப்படியெனில் மற்ற கடன்கள் என்ன என்று கேட்கதொன்றுதா....?

நமுடன் வாழ்பவர், நம்மையே ஆதாரமாக நம்பி வாழும் நமது பெற்றோர், மனைவி, குழந்தைகள், முன்னோர்கள்,நம்மை வாழவைத்த தெய்வம் என அனைவருக்கும் கடன்பட்டிருக்கிறோம்.நாம் தீர்க்கவேண்டிய கடன்களே நமக்கு பணப் பற்றாக்குறையை உண்டாக்குகிறது.நோய் ஏற்ப்பட பல காரணங்கள் உள்ளன, கடனும் அதில் ஒன்று.

சரி மேல சொன்ன எல்லா கடன்களும் தீர என்ன பரிகாரம் என்று இப்பொழுது பார்ப்போம்...



  • தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் 6,8 மடங்காக,                         ( 6,8,12,16,18,32,36,64,108 ) முறை தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
  • கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது.
  • முகிகியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.
  • இது தவிர மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் தினமும் காலை, மாலை பாராயணம் செய்தால் இன்னும் நல்லது.


எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு.


* அனைவரும் எல்லா வளங்களும் பெற இறைவனை வேண்டுவோமாக *


                                         
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்


                

                        *** நரசிம்மர் அருள்புரிவாராக ***

சகல காரியங்களும் தடையின்றி நிறைவேற தினசரி பாராயணம் செய்யவும்.




1. ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

2. ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்

3. பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

4. ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

5. ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்

6. நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

7. யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்

8. ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

9. ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

10. நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாமயஹம்

11. தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா நமாம்யஹம்

12. சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

13. உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

               

                   *** நரசிம்மர் அருள்புரிவாராக ***
   





Wednesday, October 2, 2013



  • கோயிலிலோவீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம்.
  • செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் பலன் கூடும்.
  • பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று.
  • பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே ஸ்ரீ ஹனுமானே சூட்சும வடிவில் எழுந்தருள்வான்.
  • இதை எழுதிய மகா ஞானி ஸ்ரீ துளஸிதாஸர். இவர் ராம, ஆஞ்சநேய தரிசனம் பெற்ற மகான்.
  • அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை. 



ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்
எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்
எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர
ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா
பொன்னிறம் பொருந்தியவன் நீ, சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன
நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர
நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா
நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய், மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே
சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ
ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா
ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர், கலைமகள், ஆதிசேஷன் .

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே
எமன், குபேரன், திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள், எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா
ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா
உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ
பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே
ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா
உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை
உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை
மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது, துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா
உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை
மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா
தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை
மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா
சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே
நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா
எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.
எட்டுவித சித்திகள்:
1. அணிமா-அணு போலாதல் 2. மஹிமா-எல்லையற்று எடை உடையவராதல்              3. கரிமா-எல்லையற்ற எடை உடையவராதல் 4. லகிமா-எடையே இல்லாது போலாதல் 5. ப்ராப்தி-நினைத்த இடத்திற்குச் செல்ல முடிதல் 6. ப்ரகாம்யம்-விரும்பியது கைகூடல் 7. ஈசித்வம்-இறைவனைப் போலாதல் 8. வசித்வம்-அனைவரையும் அடக்கி ஆளுதல்
ஒன்பது விதச் செல்வங்கள் ஒன்பது வகை பக்தியைக் குறிக்கிறது.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா
ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை
உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ
அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ
அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா
எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ
ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா
இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா
என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப

துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.

உன்குழலில் எனக்குப் பிடித்த அனுமன் சாலீஸா, கேட்டு மகிழுங்கள்...


                 
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff