Saturday, June 22, 2013


ஜன்மாஷ்டமி அன்று இந்த அரிஹரி ஸ்லோகத்தைச் சொன்னால்  முழு 

பாகவதமும் படிப்பதற்கு சமம். நாமும் படித்து பயன் பெறுவோம்.

கிருஷ்ண ஜனனம் :

 கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

ஹரி ஹரி ஸ்தோத்திரம் :

01 ஓதக்கடலில் உதித்தீர் அரிஹரி
உலகதுக் கொருவனாய் நின்றீர் அரிஹரி
பச்சை நிற ஆலிலை மேல் படுத்தீர் அரிஹரி
பசுங்குழந்தை ரூபமாய் இருந்தீர் அரிஹரி

02 இச்சித்த ரூபம் எடுத்தீர் அரிஹரி
இறப்பும் பிறப்பும் தவிர்ப்பீர் அரிஹரி
பச்சை நிறமுள்ள எந்தன் மாலே அரிஹரி
பக்ஷமுடன் ரட்சிக்கும் கிருஷ்ணா அரிஹரி

03 பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தீர் அரிஹரி
பங்கஜ லட்சுமியின் நாதா அரிஹரி
பூதேவி பாரம் பொறுக்காதே அரிஹரி,
பிரும்மாவுடனே வந்து சொன்னான் அரிஹரி

04 தேவர்களுகளும் ரிஷிகளும் கூடி அரிஹரி
க்ஷீராப்திக் கரை தன்னிலே வந்தாள் அரிஹரி
ஜெகந்நாதா உன்னைத் துதித்தாள் அரிஹரி
சரணாம்புஜங்களில் பணிந்தாள் அரிஹரி

05 தேவர்களுக்கபயம் அளித்தீர் அரிஹரி,
சேஷரையும் அண்ணராய்க் கொண்டீர் அரிஹரி
ஸ்ரீ கிருஷ்ண பலராமனை அளித்தீர் அரிஹரி,
கிருபையுடன் இரட்சிக்க வேண்டி அரிஹரி

06 தேவகியின் கர்ப்பத்தில் வந்தீர் அரிஹரி
திருமுகத்தைக் கண்டு மகிழ்ந்தாள் அரிஹரி
சந்திர உதயம் போல் பிறந்தீர் அரிஹரி
சதிர்புஜ மூர்த்தியாய் நின்றீர் அரிஹரி

07 தேவாதி தேவரென்று கிருஷ்ணா அரிஹரி
தேவகியும் மகிழ்ந்து ஸ்துதித்தாள் அரிஹரி
வசுதேவர் வருந்தி ஸ்துதித்தார் அரிஹரி
மர்மமாய்க் கொண்டொளிக்கச் சொன்னீர் அரிஹரி

08 வசுதேவர் விலங்கெல்லாம் மறைய அரிஹரி
வாசலெல்லாம் தாள்கள் திறக்க அரிஹரி
மைந்தரைத் தோளில் எடுத்தே அரிஹரி
வழிவிட யமுனையும் வந்தார் அரிஹரி

09 கோகுலந்தன்னில் வந்து கிருஷ்ணா அரிஹரி
கோபி யசோதை கிரஹத்தில் புகுந்தீர் அரிஹரி
மங்கை யசோதயிடம் விட்டார் அரிஹரி
மாயைப் பெண்ணைக் கொண்டு வந்தார் அரிஹரி

10 தேவகியிடம் விட்டு சிசுவை அரிஹரி
சோகத்துடன் வருந்தியேயிருந்தார் அரிஹரி
மாபாவி கம்சனிதைக் கேட்டான் அரிஹரி
வாளுருவிக் கொண்டோடி வந்தான் அரிஹரி

11 தேவகியும் அணைத்திருந்த சிசுவைத் அரிஹரி
திடுக்கிட நடுங்கவே பிடுங்கி அரிஹரி
கடுங்கோபத்துடன் கூட கமசன் அரிஹரி
கற்பாறை தன்னிலே அறைந்தான் அரிஹரி

12 பாறை தன்னில் விழாமல் மாயை அரிஹரி
பாய்ந்தெழுந்து அந்தரத்தில் போனாள் அரிஹரி
"உன்னைக் கொல்ல வந்த மாயன்" அரிஹரி
ஒளிந்து விளையயடுகிறான்" என்றாள் அரிஹரி

13 என்னைக் கொல்லவுனக் கெளிதோவென்றே அரிஹரி
ஈஸ்வரியாள் மாயை சொல்லி இகழ்ந்தே அரிஹரி
மாய்கை சொல்லி அந்தரத்தில் மறந்தாள் அரிஹரி
மதி மயங்கிக் கம்சன் மனை சென்றான் அரிஹரி

14 கோகுலந் தன்னிலே யசோதை அரிஹரி
குழந்தையைக் கண்விழித்துப் பார்த்தாள் அரிஹரி
பச்சை முகில் மேனியனைக் கண்டே அரிஹரி
பரவசமாய் எடுத்து அணைத்துக் கொண்டாள் அரிஹரி

15 நந்த கோபர் மகிழ்ந்து கிருஷ்ணா அரிஹரி
நன்மையுடன் நீராடி வந்தார் அரிஹரி
புத்திரனை எடுத்து அணைத்துக் கொண்டே அரிஹரி
பொன்னுறைத்து நாவிலிட்டுப் போற்றி அரிஹரி

16 திருமஞ்சனமாட்டிச் சிறப்பாய் அரிஹரி
திருமுலைப் பாலமுது தந்தாள் அரிஹரி
கோபாலர் கோபிகைகள் கூடி அரிஹரி
குழந்தையைக்கண்டு மனம் மகிழ்ந்தாள் அரிஹரி

17 ஜாதகர்மம் நாமகர்ணம் செய்தார் அரிஹரி
சங்கையறை தானங்களைத் தந்தே அரிஹரி
விரைதானம் கோதானம் கிருஷ்ணா அரிஹரி
வேதியருக்களித்து நந்தர் மகிழ்ந்தார் அரிஹரி

18 நந்தருடைய மாளிகையில் மகிழ்ந்தே அரிஹரி
ராமருடன் ரோகிணியும் இருந்தாள் அரிஹரி
யசோதையுடன் ரோகிணியுஞ் சேர்ந்தே அரிஹரி
ஸ்ரீகிருஷ்ண ராமனென்று சொல்லி அரிஹரி

19 கீர்த்தியுள்ள நாம்த்தை யிட்டாள் அரிஹரி
கற்காசாரி வந்து போனார் அரிஹரி
அன்னையெனும் யசோதை மகிழ அரிஹரி
அன்புடனே கோகுலத்தில் வள்ர்ந்தீர் அரிஹரி

20 பொல்லாத கம்சன் அனுப்ப அரிஹரி
பூதனையும் கோகுல்த்தில் வந்தாள் அரிஹரி
பூதனைப் பேய் முலையை உண்டீர் அரிஹரி
பாலுடன் அவளுயிரும் தின்றீர் அரிஹரி

21 சென்றவளுக்கு மோட்சம் கொடுத்தீர் அரிஹரி
திரும்பா பதவியளித்தீர் அரிஹரி
சகடாசுரனை வதைத்தீர் அரிஹரி
சிதறிவிழவே மடித்தீர் அரிஹரி

22 சுழல் காற்று அசுரனும் தோன்றி அரிஹரி
சிசுவை எடுத்தோடிச் சென்றான் அரிஹரி
சிசுவுங் கனமாகவே கிருஷ்ணா அரிஹரி
திருணாவர்த்தன் விழுந்து அங்கே மடிந்தான் அரிஹரி

23 அன்னையுட ஒக்கலையி லிருந்தே அரிஹரி
அம்புலியைத் தாவென்றழுதீர் அரிஹரி
அன்னை மயங்கியிருக்க கிருஷ்ணா அரிஹரி
அம்புலியைக் கிட்ட அழைத்தீர் அரிஹரி

24 மானிடக் குழந்தைப்போல் கிருஷ்ணா அரிஹரி
மண் தின்னும் பாவனையாய் நின்றீர் அரிஹரி
மைந்தெரென்ற பாவனையால் யசோதை அரிஹரி
மலர்க்கையை ஓங்கியே வந்தாள் அரிஹரி

25 பயந்தவர் போல வாயைத் திறந்தீர் அரிஹரி
பாருலக ஜகமெல்லாம் பார்த்தாள் அரிஹரி
பரவசமாய் திகைத்து அன்னை பார்க்க அரிஹரி
பாலனென்ற பாசத்தை அடைந்தாள் அரிஹரி

26 மத்திட்டுத் தயிர்க்கடைய மாதா அரிஹரி
மடியிலிருந்து பால் தாவென்றழுதீர் அரிஹரி
தாங்கி அன்னை மடியில் வைத்து அரிஹரி
தன் முலைப்பா லமுதம் தந்தாள் அரிஹரி

27 தாழிப்பால் பொங்கி வர கிருஷ்ணா அரிஹரி
சடுதியிலே உம்மை விட்டுப் போனாள் அரிஹரி
தணடையுடன் மெண்டயுங்குலுங்க அரிஹரி
தயிர்த்தாழி தனைக் காலால் உதைத்தீர் அரிஹரி

28 தவழ்ந்து நீர் மறைந்து விட கிருஷ்ணா அரிஹரி
தெருவெல்லாம் தேடித் தொடர்ந்தாள் அரிஹரி
வீதியெல்லாம் கூட வந்து கிருஷ்ணா அரிஹரி
விளையாடி வழி மறித்துப் பிடித்தாள் அரிஹரி

29 திருடன் இந்தக் கிருஷ்ணன் என்று சொல்லி அரிஹரி
சிட்சிக்க வேணுமென்று நினைத்தாள் அரிஹரி
உரலுடனே அணைந்துக் கட்ட உன்னை அரிஹரி
இரு விரல்கடை குறையக் கண்டாள் அரிஹரி

30 தள்ளாடி அன்னையைப் போல் நடந்தே அரிஹரி
அணைக்கயிற்றைக் கொணர்ந்து பிணைத்தாள் அரிஹரி
தாமோதரா உனைக்கட்டி கிருஷ்ணா அரிஹரி
தன் வேலைக்குப் போனாள் அரிஹரி

31 உரலுடனே தவழ்ந்துருண்டு கிருஷ்ணா அரிஹரி
உயர்ந்த மருத மரத்தை உதைத்தீர் அரிஹரி
நளகூபர் எழுந்து உனைத் துதிக்க அரிஹரி
நன்மையுடன் நற்கதியளித்தீர் அரிஹரி

32 மருத மரம் முறிந்துவிழ கிருஷ்ணா அரிஹரி
மாதாவும் தான் பயந்து வந்தாள் அரிஹரி
அர்ச்சுன விருக்ஷங்களைப் பார்த்தாள் அரிஹரி
அதனணண்டையில் நீ விளையாடக் கண்டாள் அரிஹரி

33. தந்தை அந்த நந்தர் வந்து பார்த்தே அரிஹரி
தழுவியுமை எடுதணைத்துச் சென்றார் அரிஹரி
பாலனுக்குத் திருஷ்டி சுற்றிப்போட்டார் அரிஹ்ரி
பாலலிலைதனைக் கண்டு பயந்தெளிந்தார் அரிஹரி

34 அன்புடைய தந்தை தாய் மகிழ அரிஹரி
அங்காடிப் பழம் வாங்க வந்தீர் அரிஹரி
அங்கையில் ஜம்பு பழம் கொண்டீர் அரிஹரி
அவள் மகிழ பாக்கியம் அளித்தீர் அரிஹரி

35 பிருந்தாவனமடைந்து கிருஷ்ணா அரிஹரி
பாலருடன் பசு மேய்க்கப் போனீர் அரிஹரி
கன்றுருவங்கொண்டு வந்த அசுரன் அரிஹரி
கலங்கி விழிக்கையில் வதைத்தீர் அரிஹரி

36 கொக்காசுரன் வந்து கொத்த அரிஹரி
கோரையைப்போல் கிழித்துக் கொன்றீர் அரிஹரி
மலைப்பாம்பு போல் இருந்த அவனை அரிஹரி
வாய்க்குள் புகுந்தவனை வதைத்தீர் அரிஹரி

37 ஆறாம் வயது முதல் கிருஷ்ணா அரிஹரி
அழகாகப் பசு மேய்க்கப் போனீர் அரிஹரி
கோபியர் வீடெல்லாம் சென்றீர் அரிஹரி
வெண்ணெய் பால் தயிரும் உண்டீர் அரிஹரி

38 உரியில் வைத்தச் சட்டையை உடைத்தீர் அரிஹரி
தயிர்ப்பாலைத் தோழருடன் தின்றீர் அரிஹரி
பதுங்கி நின்ற பூனைக்கும் போட்டீர் அரிஹரி
புரமிருந்த குரங்குகளும் புசிக்க அரிஹரி

39 முத்தணிந்த கோபியர்கள் கூடி அரிஹரி
முறையிட்டுக் குறை சொன்னாள் அரிஹரி
துஷ்டனிவன் என்று சொல்லக் கோதை அரிஹரி
பக்ஷமுடன் சிக்ஷிக்கப்பட்டீர் அரிஹரி

40 கோபால பாலருடன் கூடி அரிஹரி
குழலூதி விளையாடிக் களித்தீர் அரிஹரி
யமுனா நதிக்கரையில் ஆடி அரிஹரி
இனபமுடன் ததியன்னம் உண்டீர் அரிஹரி

41 பாலருடன் கன்றுகளை பிரும்மா அரிஹரி
பாராமல் கொண்டொளித்தார் அரிஹரி
நான்முகரும் அதிசயிக்க கிருஷ்ணா அரிஹரி
நன்றாகச் சிருஷ்டி செய்தீர் அரிஹரி

42 வருஷமொன்று சென்றவுடன் பிரும்மா அரிஹரி
மறைதிருந்தக் கன்றுகளை விடுத்தார் அரிஹரி
கொண்டொளித்த கோபாலர் கூடி அரிஹரி
கிருஷ்ணாவென்று கூவி வந்தார் அரிஹரி

43 மாயகையினால் சிருஷ்டித்த பாலர் அரிஹரி
மகிமையுள்ள உம்மிடத்தில் மறைந்தார் அரிஹரி
பழக்கமுள்ள பாலருடன் சேர்ந்தே அரிஹரி
பக்குவமாய் அன்னம் புசித்தீர் அரிஹரி

44 காட்சிதனைக் கண்ட பிரும்மா அரிஹரி
உம்மைக் கண்டு புகழ்ந்தார் அரிஹரி
பகவானைக் கண்டு பணிந்தார் அரிஹரி
பிரும்மாவும் தன்னுலகம் போனார் அரிஹரி

45 பிறந்திருந்தக் கன்றுகளை பார்த்தீர் அரிஹரி
பாலருடன் கோகுலத்தில் போனீர் அரிஹரி
வீடு சேர்ந்தவுடன் கிருஷணா அரிஹரி
கோபாலரெல்லாம் உனைப் புகழ்ந்தார் அரிஹரி

46 தேனுகாசுரனை வதைத்தீர் அரிஹரி
தோழருடன் பழம்பழம் புசித்தீர் அரிஹரி
துஷ்டர்களை சம்ஹரித்தீர் அரிஹரி
இஷ்டர்களைக் காத்தீர் அரிஹரி

47 காளியின் முடியில் விளையாடி அரிஹரி
கருணையுடன் அவனுயிரைக் காத்தீர் அரிஹரி
கோவர்த்தன கிரியைத் தாங்கி அரிஹரி
கருணையுடன் மழை தடுத்துக் காத்தீர் அரிஹரி

48 கொண்டாடிப் புரந்தரனும் வந்தே அரிஹரி
கோவிந்தாவென்று துதித்தான் அரிஹரி
பிரம்பலென்ற அசுரனைக் கிருஷ்ணா அரிஹரி
பலராமனால் கொன்று போட்டீர் அரிஹரி

49 கோபிகைகள் சேலைகள் கொண்டே அரிஹரி
குளிர்ந்த புன்னை மரத்தில் ஒளிந்தீர் அரிஹரி
வேணுகானஞ்செய்து கிருஷ்ணா அரிஹரி
விளையாடி ஜலக்கீரீடை செய்தீர் அரிஹரி

50 கோபியர் மனங்குளிரக் கிருஷ்ணா அரிஹரி
கீரீடைச்செய்து கிருபையுடன் இருந்தீர் அரிஹரி
பக்தியுடன் கோபியர்கள் ஸ்துதிக்க அரிஹரி
பிருந்தாவனத்தில் சஞ்சரித்தீர் அரிஹரி

51 குழலூதி கோபியரை மயங்கி அரிஹரி
கோபாலா ராசக்கிரீடை செய்தீர் அரிஹரி
கோவிந்தா குணங்களைப் பாடி அரிஹரி
கோபிகா கீதங்கலச் சொன்னாள் அரிஹரி

52 குதிரை முக அசுரனைக் கொன்றீர் அரிஹரி
வியோமாசுரனை வதைத்தீர் அரிஹரி
மலைக் குஹையின் பாலர்களை மீட்டீர் அரிஹரி
மகிழ்ச்சியுடன் விளையாடி வந்தீர் அரிஹரி

53 அரிஷ்டனென்ற அசுரனை அழித்தீர் அரிஹரி
அவனுடைய கர்வத்தை ஒழித்தீர் அரிஹரி
அக்ரூரர் வந்தழைக்க கிருஷ்ணா அரிஹரி
அண்ணருடன் தேரேறிச் சென்றீர் அரிஹரி

54 அக்ரூரர் துதித்திடவே கிருஷ்ணா அரிஹரி
அணிரதத்தில் அண்ண்ணருடன் இருந்தீர் அரிஹரி
காளிந்தி நதிக்கரையில் கிருஷ்ணா அரிஹரி
காட்சியுள்ள விசுவரூபம் அளித்தீர் அரிஹரி

55 அக்ரூரர் விச்வரூபம் கண்டார் அரிஹரி
அதிசயித்து பரவசமடைந்தார் அரிஹரி
வைகுந்த வைபவத்தைக் கண்டே அரிஹரி
வணக்கமுடன் பணிந்தே துதித்தார் அரிஹரி

56 ஆதியுமனாதியும் ஆனீர் அரிஹரி
அகிலசிருஷ்டிஸ்திதி லயமுஞ்செய்தீர் அரிஹரி
பிருகிருதி என்னும் பெட்டகத்திலிருந்து அரிஹரி
பிரும்மாவும் உன்னிடம் துதித்தார் அரிஹரி

57 மாயைக்கும் எட்டாத விஷ்ணு அரிஹரி
முக்குணங்களற்றிருக்கும் மூர்த்தி அரிஹரி
மத்ஸ்யாவதாரம் எடுத்தீர் அரிஹரி அரிஹரி
மனுவைப் பிரலயத்தில் காத்தீர் அரிஹரி

58 மதுகைட அசுரர்களை வதைத்தீர் அரிஹரி
மலாயன் மயக்கம் ஒழித்தீர் அரிஹரி
ஹயக்ரீவ மூர்த்தியாய் நின்றீர் அரிஹரி
அன்பர்களுக்குபதேசம் செய்தீர் அரிஹரி

59 கூர்மாவதாரம் எடுத்தீர் அரிஹரி
கிரி தாங்கி அமிருதம் கடைந்தீர் அரிஹரி
வராகவதாரம் எடுத்தீர் அரிஹரி
விளையாட்டாய் அசுரனை வதைத்தீர் அரிஹரி

60 நரசிம்மராய் தூனில் உதித்தீர் அரிஹரி
நடுங்க இரன்யனைப் பிளந்தீர் அரிஹரி
வாமனராய் வந்துதித்தீர் அரிஹரி
மாபலியை வஞ்சித்துப் போட்டீர் அரிஹரி

61 பரசுராமனாய் பிறந்தீர் அரிஹரி
பகைத்த அசுரர்களை வதைத்தீர் அரிஹரி
தசரதர்க்கு மைந்தராய் வந்தீர் அரிஹரி
தம்பியர்களுடன் கூடப் பிறந்தீர் அரிஹரி

62 தருமம் தழைத்தோங்க ஸ்ரீ ராமா அரிஹரி
சத்தியத்தை நிறைவேற்றி நின்றீர் அரிஹரி
கொடியவளாம் தாடகையை முடித்தீர் அரிஹரி
கௌசிகரின் யாகத்தைக் காத்தீர் அரிஹரி

63 மாரீசனைக் க்டலில் தள்ளி அரிஹரி
மகமுனிவரின் யக்ஞம் முடித்தீர் அரிஹரி
அகலிகையின் சாபம் துடைத்தீர் அரிஹரி
அவள் சென்மம் ஈடேற்றி போட்டீர் அரிஹரி

64 ஜனகரிடமிருந்த வில்லை ஒடித்தீர் அரிஹரி
சீதையை மாலையிட்டு வந்தீர் அரிஹரி
பரசுராமன் வில்லை முறித்தீர் அரிஹரி
பலத்துடனே அவர் தபஸை அடைந்தீர் அரிஹரி

65 பிதுர் வாக்கியம் நிறைவேற்ற ராமா அரிஹரி
பதினாலு வருடம் வனம் போனீர் அரிஹரி
தண்டகாவனம் சென்ற ராமா அரிஹரி
சூர்ப்பனகையைப் பங்கம் செய்தீர் அரிஹரி

66 சன்யாசி ராவணன் வந்து அரிஹரி
ஜானைகியைச் சிறை எடுத்துப் போனான் அரிஹரி
ஜடாயுவுக்கு மோட்சம் கொடுத்தீர் அரிஹரி
சபரிக்கு முக்தி அளித்தீர் அரிஹரி

67 சுக்கிரீவன் தோழமையைக் கொண்டீர் அரிஹரி
துடுக்க்கான வாலியை முடித்தீர் அரிஹரி
அன்பான மாருதியுந்தேடி அரிஹரி
கணையாழிதனைக் கைக்கொடுத்து வந்தார் அரிஹரி

68 சூடாமணிக் கண்டு ராமா அரிஹரி
சேதுவினிலணைக் கட்டிச் சென்றீர் அரிஹரி
தசமுகனைக் குலத்துடனே கொன்றீர் அரிஹரி
சீதையைச் சிறை மீட்டுக் கொண்டீர் அரிஹரி

69 அன்புடைய கௌசலையும் மகிழ அரிஹரி
அயோத்திக்கு அரசனாய் இருந்தீர் அரிஹரி
பலராம கிருஷ்ண்னாய் பிறந்தீர் அரிஹரி
பார்த்தனுக்கு சாரதியாய் அமர்ந்தீர் அரிஹரி

70 பொல்லாத அசுரர்களைக் குறைத்தீர் அரிஹரி
பூதேவி பாரம் குறைத்தீர் அரிஹரி
பார்த்தனுக்கு தத்துவம் உணர்த்தீர் அரிஹரி
பாரதப் போரை முடித்தீர் அரிஹரி

71 பௌத்தாவதாரத்தை எடுத்தீர் அரிஹரி
பிராணிகளுக்குபஹாரம் செய்தீர் அரிஹரி
கலிதன்னைத் தொலைத்திடவே கிருஷ்ணா அரிஹரி
கருணையுடன் காட்சி தன்னை அளிப்பீர் அரிஹரி

72 ஆதி நாராயணா நமஸ்தே அரிஹரி
அக்ஞானம் நீக்குவாய் கிருஷ்ணா அரிஹரி
பக்தியுடன் அக்ரூரர் துதித்து அரிஹரி
பலராம கிருஷ்ணனைப் புகழ்ந்தார் அரிஹரி

73 மகிழ்ச்சியுடன் துதிக்கவே கிருஷ்ணா அரிஹரி
மதுரா நகரம் அடைந்தீர் அரிஹரி
வணங்காத வண்ணானை வதைத்தீர் அரிஹரி
வஸதிரங்களை வழங்கி நின்றீர் அரிஹரி

74 மலர் மாலை அளித்திட்ட நம்பிக்கு அரிஹரி
வைகுண்ட பதவியைக் கொடுத்தீர் அரிஹரி
பரிமளச் சந்தனங்க்ள் பூசி அரிஹரி
பரிவுடன் கூனலையும் நிமிர்த்தி அரிஹரி

75 திருவக்ரியை மனமகிழச் செய்தீர் அரிஹரி
சேணியனன ஆடை அணி தந்தான் அரிஹரி
அண்ணருடன் வாங்கி அணிந்தீர் அரிஹரி
அன்புடனே பதவி அளித்தீர் அரிஹரி

76 குவலையா பீடத்தைக் கண்டீர் அரிஹரி
கொன்று மதவீரங்குலைத்தீர் அரிஹரி
சாணூரன் முஷ்டியைத் தள்ளி அரிஹரி
தமயனுடன்கூடி ஜெயித்தீர் அரிஹரி

77 கம்ஸன் மஞ்சத்தில் குதித்தீர் அரிஹரி
கிரீடம் சிதறி விழக் கொன்றீர் அரிஹரி
எட்டுப்பேர் தம்பியர்கள் கிட்ட அரிஹரி
இராமரின் ஆயுதத்தால் மடித்தீர் அரிஹரி

78 அண்ணருடன் கூடி கிருஷ்ணா அரிஹரி
அன்னை தந்தை அடி வணங்கி நின்றீர் அரிஹரி
தந்தை தாய் சிறை நீக்கி கிருஷ்ணா அரிஹரி
ஜயமடைந்து அவர்களுடன் இருந்தீர் அரிஹரி

79 வசுதேவரும் தேவகியும் மகிழ்ந்தே அரிஹரி
மைந்தர்களைத் தழுவி அணைத்து அரிஹரி
தழுவியே முத்தமிட்டுத் தாயார் அரிஹரி
தன்னுடைய சோகந்தணிந்தாள் அரிஹரி

80 ய்சோதையுடன் நந்தரையும் போற்றி அரிஹரி
சொந்தமுடன் கோகுலத்தில் சேர்ந்தே அரிஹரி
யசோதை வாஞ்சயினால் கிருஷ்ணா அரிஹரி
இருவருக்கும் மைந்தரரய் இருந்தீர் அரிஹரி

81 சொந்தமுள்ள மைந்தருக்காகத் தந்தை அரிஹரி
சிறப்புடனே ஹோமங்கள் செய்தீர் அரிஹரி
மகரிஷிகள் அந்தணர்கள் மகிழ அரிஹரி
வரிசையுடன் தானம் வழங்கி வந்தார் அரிஹரி

82 ப்சுக்களுடன் கன்றுகளைக் கிருஷ்ணா அரிஹரி
பிராமணர்கள் மகிழ அளித்தார் அரிஹரி
போஜனங்கள் செய்தே கிருஷ்ணா அரிஹரி
பந்து ஜனங்களுடன் வசித்தீர் அரிஹரி

83 உக்கிரசேனன் ராஜாவையழைத்தே அரிஹரி
உரிமையுடன் ராஜ்ஜியத்தை அளித்தீர் அரிஹரி
சாந்தீப முனிவரிடம் சென்றீர் அரிஹரி
சகல வித்தையும் கற்றுக்கொண்டீர் அரிஹரி

84 பஞ்சனனைக் கொன்று கிருஷ்ணா அரிஹரி
பாஞ்சஜன்ய சங்கமடைந்தீர் அரிஹரி
காலன் யமதர்மனிடம் சென்றீர் அரிஹரி
குருசுதனை மீட்டுக் கொடுத்தீர் அரிஹரி

85 உத்தவரை உபசரித்து அனுப்பி அரிஹரி
குற்றமற்ற கோபியர்க்குச் சொன்னீர் அரிஹரி
கோபியர்கள் உத்தவரைக் கண்டு அரிஹரி
கிருஷ்ணனைக் கொண்டாடி இருந்தாள் அரிஹரி

86 சிசுபாலன் கர்வம் அடக்கி அரிஹரி
ஸ்ரீ ருக்மிணியை அடைந்தீர் அரிஹரி
அஷ்ட் லடசுமியுடன் கிருஷ்ணா அரிஹரி
அழகான் துவாரகையில் வசித்தீர் அரிஹரி

ஓம் தத் ஸத்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff