நான் ரசித்து படித்தது, பார்த்தது, மற்றவர்கள் சொன்னதில் எனக்கு பிடித்தது.
Thursday, January 9, 2014
பெங்களூரின் சிறந்த வணிகத்தலங்களுள் (shopping mall) ஒன்று.
என் இறுதியாண்டு கல்லுரி படிப்பின் படி, ஏதேனும் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். சுயமாகவும் செய்யலாம் அல்லது ஒரு நல்ல அங்கீகரிக்கப்பட நிறுவனத்தின் மேற்பார்வையிலும் செய்யலாம். அனுபவத்திற்காக நானும் என் நண்பர்கள் Gokul Sachaமற்றும் Aravindh Kumar ம் பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் செய்ய முடிவெடுத்து அனுமதியும் பெற்றோம்.
அனுமதி கிடைத்ததும் உள்ளுக்குள் ஒரே குழி அதுவும் அலுவல் நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை தான் என்றவுடன். அப்பாடா மிச்சம் இருக்கும் நேரத்தில் பெங்களூரை நல்லா சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். சுற்றி பார்க்க என்ன என்ன இடம்லாம் இருக்குனு விக்கிபீடியா மற்றும் வலைதளங்களில் தேடி இடங்களை குறித்து வைத்துகொண்டோம். அப்படி முக்கியமான இடங்கள் என்று குறித்தவற்றில் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலும் ஒன்று (எனக்கு கோகுல நாயகனின் மீது தீரா பற்று).
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையிலையே மர்தஹல்லியில் ரூபாய் 60 டிக்கெட் (daily pass) வாங்கிட்டு இஸ்கான் புறப்பட ஆனோம், 10 மணியளவில் இஸ்கான் சென்றடைந்தோம். உள்ளே போகும் போதே ஒரு அவா, அட உலக அளவில் பகவானின் திருநாமத்தை பரவ செய்த அமைப்பினுடைய கோவிலாச்சே, நல்லா பக்தி மனம் கமழும் ஒரு சாந்தம் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன் !!!
நுழைவு வாயிலிலே கால் அலம்பும் வசதி இருந்தது, கால் அலம்பிட்டு உள்ளே சென்றால் ஒரு பெரிய விசாலமான இடம், முழுவதும் மழ மழனு இழைச்சு வச்சுருந்தாங்க (என்னதான் மழ மழனு இருந்தாலும் கருங்கல்லில் எழும்பியிருக்கும் கோவிலில் கால் வைத்தவுடன் வரும் பக்தி பரவசம் கிடைபதில்லை). ருக்மனிதேவியுடன் கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தரிசனம், நல்ல அலங்காரம் பக்கத்திலே பலராமர். சேவித்து விட்டு நகரும்பொழுதே சில அடிகளில் பல மொழிகளில் பகவத்கீதை விற்கும் கடை (கொஞ்சமாவது தள்ளி வைத்திருக்கலாம்) அதை விடுத்து கிருஷ்ணரின் எதிரிலே சிறிது நேரம் அமர்ந்தோம்.
சரி கிளம்பலாம்னு என்று வெளிய போகும் வழியை தேடி போனால் அது கீழே அடி தளத்திற்கு இட்டு சென்றது. போகும் வழியிலே ஒரு இனிப்புக் கடை அதை பலர் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழி அப்படியே வளைந்து வளைந்து நிறைய கடைகளுக்கு கூட்டி சென்றது. அந்த கடைகளில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம், கிருஷ்ணர் படம் போட்ட பனியன் , சட்டை, பைஜாமா, குர்தானு பெரியவங்க, சிரியவங்க, பெண்கள்னு எல்லாருக்கும் இருக்கு எல்லாத்தையும் வாங்க நிறைய கூட்டம், சாமி கும்பிட எடுத்துகிட்ட நேரத்தை விட அதிகமா செலவு செய்து தங்களுக்காண சரியான அளவுள்ள ஆடைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தார்கள். அதை தாண்டி வந்தா நோட்டு, புத்தகம், பேனா, pen drive, புல்லாங்குழல்னு பல வகை பொருட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைகிறது.
அப்படியே வந்துட்டு இருந்தா அப்புறம் வருவது உணவகங்கள் மற்றும் இனிப்பு பகுதி. இங்க உங்களுக்கு கிடைக்காத இனிப்பு வகைகளே இல்லை எனலாம். எல்லாம் அதிக விலை தான். இது ஒரு நீண்ட பிரிவு நல்லா நிதானமா எல்லாத்தையும் ருசி பார்கிறார்கள். அதையும் தாண்டி போகும் பொது தான் ஒரு அறிவிப்பு பலகை வெளியே செல்லும் வழினு போட்டிருந்துச்சு. அப்பதான் சட்டுன்னு நினைவே வந்தது, “நாம இதுவரை கோவிலில் தான் இருந்தோம் என்றே”.
அதாவது இஸ்கானின் மொத்த அமைப்பே ஒரு கல்யாண மண்டபம் மாதிரி தான் எனக்கு தோன்றியது. அதாவது மேல கல்யாணம் முடிஞ்சு அப்படியே கீழ சாப்பிட போவாங்களே அது மாதிரி தான். என்ன கல்யாண மண்டபத்திலாவது மேல பெருசாவும், கீழ சாப்பிடும் இடம் சிறுசாவும் இருக்கும். இங்க அப்படியே தலைகீழ். இதையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு இஸ்கானின் இலக்கு கிருஷ்ண நாமத்தை பரப்புவதா இல்லை பெரு வணிக நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யதா என்றே புரிய வில்லை.
பெங்களூரில் நான் நிறைய வணிகதலங்க்களுக்கு சென்று வந்தேன். அப்பொழுது கிருஸ்துமஸ் நேரம் என்பதால் எல்லா வளாகங்களும் ஒரு இடத்தில சிறிதும் பெரியதுமாக கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அலங்காரப் படுத்தியிருந்தார்கள். இஸ்கான் இவர்களிடம் இருந்து வேறுபடுவது ஒரே விசியத்தில் தான், அவங்க கிறிஸ்துமஸ் முடிந்ததும் குடிலின் அலங்காரங்களை கலைத்து குடிலை அகற்றி விடுவார்கள் ஆனால் இவர்களோ கிருஷ்ண ஜெயந்தி முடிந்தாலும் கிருஷ்ணரை அகற்றாமல் அலங்காரங்களை தொடர்கிறார்கள் ( பின்ன கூட்டம் கூடுதுல ).
மொத்தத்தில் இஸ்கானுக்கு ஒருநாளின் பாதியை ஒதுக்கியதில் ஏமாற்றமே மிச்சம்.
இவன் --- - கிருஷ்ண பக்தன்
—
Thursday, October 24, 2013
எந்த
மென்பொருள்கள் பயன்படும் என்பதை பார்பதற்க்கு முன்னர் தமிழ் மொழியை எந்த எந்த
முறைகளில் உள்ளிடலாம் என்பதை முதலில் பார்போம். பரவலாக இரண்டு வழிகளில் நாம் தமிழை
தட்டச்சு செயலாம். முதலாவது தமிழ் மொழிகென்றே வடிவமைக்கப் பட்ட கீபோர்ட் மூலமாக .
இதற்க்கு உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
(எ.கா: tamil 99
key board, tamil old typewriting keyboard, tamil new typewriting key board.) முதலாவது முறையில் தட்டச்சு செய்ய மேற்சொல்லியிருக்கும் விசைபலகைகளில்
ஏதேனும் ஒன்றை கற்றிருக்க வேண்டும். இது கொஞ்சம் சிரமமான வழி ஆனால் சரியான வழி.
இரண்டாவது முறை நம்மை போன்ற சோம்பேறிகளுக்கானது, அது தான் phonetic
keyboard முறை. இந்த முறையில் நாம் (amma) என்று
தட்டசிட்டாலே (அம்மா ) என்று வந்துவிடும், இதுதான் பலராலும்
உபயோகப்படுத்தும் முறையேன்றாலும், கொஞ்சம் தவறான முறைதான்.
தமிங்க்லீஷில் தட்டச்சு செய்வதற்க்கு இது பரவாயில்லை.
தமிழ் மொழி என்றில்லை, இந்திய மொழி அனைத்திலும் தட்டச்சு செய்வதற்கு அனைவராலும் பரவலாக
உபயோகப் படுத்தபடும் மென்பொருள்கள் 3 . அவை,
1. Google Input Tools:
இந்த மென்பொருள் கூகிள் குழுமம் தரும்
இலவச மென்பொருள். இதன் மூலம் இந்திய
மொழிகள் மட்டுமின்றி 22 மொழிகளில் தட்டச்சு செய்ய உதவுகிறது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள். இது போனேடிக் (phonetic) வகையை
சார்ந்தது.
இது மைக்ரோசாப்ட் தரும் இலவச மென்பொருளாகும், இது இந்திய மொழிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.இதுவும்
போனேடிக் (phonetic) வகையை சார்ந்தது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
கீழே கொடுதுள்ளஇணைபிற்க்கு செல்லுங்கள்.
இது New Horizon Media என்ற நிறுவனத்தால்
தரப்படும் இலவச மென்பொருளாகும். இதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற முக்கிய இந்திய மொழிகளை தட்டச்சிடும் வசதி தரப்பட்டுள்ளது. மேலும்
இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக, போனேடிக் மட்டுமல்லாது, இதர விசைபலகைகளும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இது பலராலும் விரும்பி பயன்படுத்தப்
படுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
கீழே கொடுதுள்ளஇணைபிற்க்கு செல்லுங்கள்.
நம்மால் பெரியதாய் தமிழ் மொழியை
வளர்க்க முடியாவிட்டாலும், கூடிய மட்டும் தமிழை உயிர்ப்போடாவது வைத்திருக்க பங்களிப்போம்.ஏதேனும்
விளக்கம் வேண்டின் கருத்துறையிடுக..... படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் 99 விசைப்பலகை.
Monday, October 14, 2013
பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க வாங்கும் பணம் பட்டும் கடன் அல்ல.
அப்படியெனில் மற்ற கடன்கள் என்ன என்று கேட்கதொன்றுதா....?
நமுடன் வாழ்பவர், நம்மையே ஆதாரமாக நம்பி வாழும் நமது பெற்றோர், மனைவி,
குழந்தைகள், முன்னோர்கள்,நம்மை வாழவைத்த தெய்வம் என அனைவருக்கும்
கடன்பட்டிருக்கிறோம்.நாம் தீர்க்கவேண்டிய கடன்களே நமக்கு பணப் பற்றாக்குறையை
உண்டாக்குகிறது.நோய் ஏற்ப்பட பல காரணங்கள் உள்ளன, கடனும் அதில் ஒன்று.
சரி மேல சொன்ன எல்லா கடன்களும் தீர என்ன பரிகாரம் என்று இப்பொழுது
பார்ப்போம்...
தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின்
முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்6,8 மடங்காக, ( 6,8,12,16,18,32,36,64,108 ) முறை
தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது.
முகிகியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.
எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில்
இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு
படித்தால் நிச்சயம் பலன் உண்டு.
* அனைவரும் எல்லா வளங்களும்
பெற இறைவனை வேண்டுவோமாக *
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா
ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண
முக்தயே
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக
ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக
வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம்
பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண
முக்தயே
மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில்
அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு
விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ
லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத
தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண
முக்தயே
ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக
அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து
விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ
நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண
முக்தயே
நினைத்த உடனேயே அனைத்து
பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை
முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி
பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண
முக்தயே
மிக பயங்கரமான சிம்ஹத்தின்
கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து
விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய
ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும்
சகல செல்வத்தையும் அடைவார்
*** நரசிம்மர் அருள்புரிவாராக ***
சகல
காரியங்களும் தடையின்றி நிறைவேற தினசரி பாராயணம் செய்யவும்.
1. ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத்
புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய
தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த
விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம்
நமாம்யஹம்
2. ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே
ஸூதம்
நகாக்ரை:
சகலீசக்ரே
யஸ்தம் வீரம்
நமாம்யஹம்
3. பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட
த்ரிவி டபம்
புஜ
ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும்
நமாம்யஹம்
4. ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந்
யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா
யஸ்ய
தம் ஜ்வலந்தம்
நமாம்யஹம்
5. ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர
ஸர்வதா
யோ ஜாநாதி
நமாம்யாத்யம்
தமஹம்
ஸர்வதோமுகம்
6. நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம்
மஹாத்மந
மஹா ஸடம் மஹா
தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம்
நமாம்யஹம்
7. யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள
ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச
ப்ரணச்யந்தி
பீஷணம் தம்
நமாம்யஹம்
8. ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர
மச்நுதே
ச்ரியா ச பத்ரயா
ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம்
நமாம்யஹம்
9. ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும்
சத்ரு கணாந்விதம்
பக்தாநாம்
நாசயேத் யஸ்து
ம்ருத்யும்
ம்ருத்யும் நமாம்யஹம்
10. நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம
நிவேதநம்
த்யக்தது: கோகிலாந்
காமாந்
அச்நந்தம் தம்
நமாமயஹம்
11. தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந
பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா
நமாம்யஹம்
12. சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ
நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய:
படேத் தஸ்ய
ஸ்ரீர்வித்
யாயுஸ்ச வர்த்ததே
13. உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம்
ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம்
பீஷணம் பத்ரம்
ம்ருத்யும்
ம்ருத்யும் நமாம்யஹம்
*** நரசிம்மர் அருள்புரிவாராக ***
Wednesday, October 2, 2013
கோயிலிலோ, வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம்
செய்யலாம்.
செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் பலன் கூடும்.
பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால்
நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று.
பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே
ஸ்ரீ ஹனுமானே சூட்சும வடிவில் எழுந்தருள்வான்.
இதை எழுதிய மகா ஞானி ஸ்ரீ துளஸிதாஸர். இவர் ராம, ஆஞ்சநேய
தரிசனம் பெற்ற மகான்.
அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீகுரு சரண்
ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்
எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால்
தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின்
மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.
புத்தி ஹீன தனு ஜானி
கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்
எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு
வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும்
தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.
ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின்
தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன்
என்னும் பெயர்பெற்றவன்.
3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ.
துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.
உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப்
புல்லாலான பூணூல் அணி செய்கிறது.
6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன
நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது
தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி
என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி
என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.
7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர
நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும்
கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம்
கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.
ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக்
கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும்
வியப்பிற்குரியதல்ல.
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.
துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள
உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது
இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.
உன்குழலில் எனக்குப் பிடித்த அனுமன் சாலீஸா, கேட்டு மகிழுங்கள்...