Friday, September 20, 2013

ஜாதகப் பொருத்தம் எவ்விதம் பார்க்கவேண்டும் ?

No comments:
 




ஜாதகப் பொருத்தம் எவ்விதம் பார்க்கவேண்டும் என்பதை பூர்வபாராசர்யம் என்ற புராதன ஜோதிட நூல் விளக்கியுள்ளது.
பிள்ளையின் ஜாதகத்தில் முதலில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது, பிள்ளையின் ஜெனனகால லக்கினத்தைதான்! ஜெனன கால லக்கினத்திலிருந்து, அவர் பிறந்துள்ள குடும்பம், அவர் வளர்ந்துள்ள பின்னணி ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். ஒழுக்கமும், கட்டுப்பாடும், தெய்வபக்தியும் உள்ள குடும்பமா, இல்லையா என்பதை லக்கினம் எடுத்துக்காட்டும்.

இரண்டாவதாக, லக்கினத்திலிருந்து 5-ம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வ புனிய ஸ்தானம் சுப்பக்கிரகங்களின் ஆதிபத்தியத்தில் இருந்தாலும், சுபக்கிரகங்களால் பார்க்கப் பட்டாலும், சுபகிரகங்கள்  அமர்ந்திருந்தாலும், வரம் முற்பிறவிகளில் பல புண்ணிய காரியங்களைச் செய்து, அந்த பழங்களுடன் பிறந்திருப்பது தெரியும். திருமனத்திருக்குப் பிறகு, வாழ்க்கையில் சோதனைகள் ஏற்பத்தும்போது இந்த பூர்வ புண்ணியம் கைக்கொடுக்கும். ஆதலால் வரனின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எப்படியிருக்கிறது என்பது பற்றி ஆராய வேண்டும்.
மேலும், குழந்தைகள் பிறப்பது, அக்குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வது ஆகியவற்றையும் இந்த பூர்வ புண்ணிய ஸ்தானம்தான் நிர்னைக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக களத்திர, சயன ஸ்தானமாகிய 7-ம் இடம், இது கணவர்-மனைவியிடையே ஏற்படும் தாம்பத்திய உறவை எடுத்துக்காட்டும் இடமாகும். பரஸ்பர பிணைப்பும், ஒருவர்மீது ஒருவர்க்கு ஏற்படும் அன்னியோநியத்தையும் இந்த 7-ம் இடமே நிர்ணயிக்கிறது.
கடைசியாக உடல்நலம், ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் 8-ம் இடம் (அஷ்டம ஸ்தானம்). பெண்களுக்கு இந்த 8-ம் இடமே மாங்கல்ய ஸ்தானமும் ஆகிறது.

ஆதலால், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, லக்கினம், லக்கினத்திலிருந்து 5,7,8 ஆகிய நான்கு இடங்களையும் ஆராய்ந்து பார்த்தபின்பே மற்ற பொருத்தங்களை பார்த்து, வரனை நிச்சயிக்க வேண்டும். 
            

No comments:

Post a Comment

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff